Child Protection Unit Recruitment 2019: Pudukkottai Child Protection Unit: புதுக்கோட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் குழந்தைகள் பதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர், சமூக பணியாளர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத்துறையில், தொகுப்பூதியம் அடிப்படையில் 3 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது.
இந்த பணிக்கு பட்டதாரி/முதுகலை பட்டதாரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குற்றவியல், கல்வியியல், குழந்தை வளர்ச்சி, உளவியல், சமூகப்பணி, சமூகவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கல்வி, சமூக நலம், குழந்தை நலம் ஆகியவற்றில் மூன்று வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.