தமிழ்நாடு மின்பகிர்மாணக் கழகத்தில் அப்ரண்டிஸ் (தொழில் பழகுநர்) பயிற்சிக்கு நேர்காணல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.
மிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தில் தற்போது வயர்மேன், எலெக்ட்ரீசியன் ஆகிய பணிகளுக்கு தொழில் பழகுநர் பயிற்சிக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை வட்டம் மேற்பார்வை பொறியாளர் செ.ஜான் சுந்தரராஜ் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் வைத்து வரும் டிசம்பர் 18,19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த நேர்காணலில் 45 வயதுக்குட்பட்டோர் கலந்து கொள்ளலாம். ஏற்கனவே, தொழில் பழகுநர் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளக்கூடாது.
எலெக்ட்ரீசியன், வயர்மேன் பணிக்கு பயிற்சி நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர்கள், தங்களுடைய அசல்/நகல் கல்விச்சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். அதாவது, 10,12 ஆம் வகுப்பு சான்றிதழ், ஐடிஐ NTC Provisional Certificate, வகுப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பில் பதிவு செய்த அட்டை, புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டை ஆகியவை கொண்டு வர வேண்டும். நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்பட மாட்டாது